திரு. ஆ.மா.சகதீசன் அவர்களின் அணிந்துரை

ஜேம்ஸ் ஆலனின் ”BYWAYS OF BLESSEDNESS”      நூலின் தமிழ் மொழிப்பெயர்ப்பான இந்நூல் மிக சிறப்பாக , எளிமையாக அமைந்துள்ளது. இது ஒரு சுய முன்னேற்ற நூல்.மனித வாழ்வில் ஒவ்வொருவரும் இதை படித்து தன்னையே  திருத்திக் கொள்ள வழிக்காட்டி.

நற்குணங்களும் சில தீய குணங்களும் கலந்த ஒரு கூட்டே மனிதன்.தூய்மையே முழுமையாக அமைந்த ஒரு தனி மனிதனைக் காண முடியாது.இந்த நூலில் உள்ள ஒவ்வொரு தலைப்பும் விளக்கங்களும் சிறப்பாக தெளிவாக விளங்குவதால் நம்மை நாமே திருத்திக் கொள்ள உதவும்.மனிதன் தீயவற்றை விலக்கி, குறைத்து,படிபடியாக பண்பட இந்த நூல் ஒரு ஆங்கிலத் திருக்குறள்.

மனிதன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள், நற்செயல்கள்,உள்ளத்தியாகங்கள், பல்லுயிர்களை பாதுகாக்கும் இரக்க குணம், எல்லோருடைய தவறுகளை மன்னிக்கும் நல் மனம் போன்ற இவற்றை முழுமனதுடன் கடைபிடித்தால் நிலையான மனநிம்மதி, திருப்தி,மகிழ்ச்சி,அமைதி,ஆனந்தம் எல்லாம் பெற்று வாழ்க்கையை சித்தர்கள்,வள்ளலார் காட்டிய ஒளியில் அடைவோம்.

திரு.அருணாசலம் மூலநூல் ஆசிரியரின் எண்ணத்தை பிரளாமல் தமிழில் அள்ளித் தந்துள்ளார். இவர் கூட்டவும் இல்லை ; குறைக்கவும் இல்லை. எளிமை, சிறப்பு, சொற்த் தொடர்கள் அனைத்தும்  மிக பிரமாதம். வாழ்த்துக்கள்.

–சகதீசன் .ஆ.மா.

12.01.2017

Feedback/Errata

Comments are closed.