8 மன்னிக்கும் தன்மை

 

மற்றவர்களை (அவர்கள் அறிந்து செயல் படுகிறார்களோ, அறியாமல் செயல்படுகிறார்களோ ) கண்மூடித்தனமாக விமர்சிப்பதால் ஏற்படுகின்ற பயனில்லாத வீணான மன உறுத்தலையும் வலியையும் மனிதர்கள் புரிந்து கொண்டால் ,

பிறரது இதய உணர்வுகளை இரக்கமற்று புண்படுத்துவதன் விளைவையும் உணர்ந்து கொண்டால்

மன காயங்களை ஆற்றும் மருந்தாகக் கனிவான வார்த்தைகளையும் உணர்வுகளையும் அவர்கள் வழங்குவார்கள்.

அன்பும், இரக்கமும் பழி வாங்குவதை விட எப்போதும் சிறந்தது.

ஷேக்ஸ்பியர்.

மன காயங்களை நினைவில் வைத்துக் கொண்டே இருப்பது, ஆன்மீக இருளாகும். கோபத்தை ஊட்டி வளர்ப்பது ஆன்மீக தற்கொலையாகும். மனம் இரங்கி மன்னிப்பை பெறுவதும் வழங்குவதுமே மெய்யறிவின் ஆரம்பமாகும். அது தான் நிம்மதியின், மகிழ்ச்சியின் ஆரம்பமும் கூட. தவறுகளையும், தலை குனிவு, மன காயங்களையும் எண்ணி மனதில் உழன்று கொண்டே இருப்பவனுக்கு ஓய்வும் இல்லை. தனக்கு அவமானம், அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, தன் எதிரியின் மீது சதி திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பவன் அமைதியான மனதை அறியவே மாட்டான்.

தீய எண்ண அலைகள் சுழலும் இதயத்தில் மகிழ்ச்சி எப்படி வசிக்க முடியும்? தீ பற்றி எரியும் மரத்தில் பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து இன்னிசையைப் பாடமுடியுமா? கோப நெருப்பு எரியும் இதயத்தில் மகிழ்ச்சியும் தங்க முடியாது. முட்டாள்தனம் கோலோச்சும் இடத்தில் மெய்யறிவு உட்புக முடியாது.

மன்னிப்பின் உயர்மாண்பில் ஈடுபடாதவர்களுக்கே பழிக்கு பழி வாங்குவது இனிமையாக இருக்கும். ஆனால் மன்னிப்பின் இன்சுவையை உணர்ந்து கொள்ளும் போது தான் பழி வாங்குவதன் சுவை எவ்வளவு கசப்பானது என்று புரியும். வெறுப்புணர்வில் தீவிரமாக ஈடுபடுபவர்களுக்குப் பழி வாங்குவதே மகிழ்ச்சிக்கான பாதையாகத் தோன்றும். ஆனால் வெறுப்புணர்வின் வன்முறையை விலக்கும் போது, மன்னிப்பின் மென்மையான வழிமுறைகளைத் தழுவும் போது தான் , பழிவாங்குவது எந்த அளவு துன்பத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பது தெளிவாகும்.

பழிவாங்கும்உணர்வுஎன்பதுமனதின்நற்செயல்பாடுகளைமுடக்கும்ஒருநச்சுக்கிருமியாகும். அதுஆன்மீகஇருப்பை விஷமாக்கி விடுகின்றது. கொந்தளிக்கும்கோபம்என்பதுமனதின்ஆக்கசக்திகளைஎல்லாம்எரித்து விடும்ஒருமனகாய்ச்சலாகும். வன்முறையைக்கையில்எடுப்பதுநல்ஒழுக்கத்தில்பலவீணமாகஇருப்பதைக்காட்டுகிறது. அதுஅன்பும் நல்லெண்ணமும்பரவுவதைத்தடுக்கின்றது. ஆண்களும்பெண்களும்இவ்வகைத்தீங்குகளிலிருந்துவிடுபடவேண்டும். மன்னிக்கும்தன்மையற்ற, வெறுப்பைஉமிழும்இதயம்என்பதுதுன்பத்தின், துக்கத்தின்ஊற்றாகும். அவற்றைஇதயத்திற்குள் உட்புக அனுமதித்துஊக்குவிப்பவன், அவற்றிலிருந்துமீளாமல்கைவிடாதுஇருப்பவன், பெருமளவுபேரருளைஇழக்கின்றான். மெய்யறிவைசிறிதளவுபெறும்வாய்ப்பையும்இழக்கின்றான். இதயம்கல்போல்இறுகிஇருப்பதுஎன்பதுபெரும்துன்பம் ஆகும். ஒளியையும், நல்வாழ்வையும்வரவழைக்க முடியாமல் இருப்பதாகும். இதயம்மலர்போல்மெல்லிதழ்களாக இருப்பதுபேரின்பமாகும். ஒளியையும், நல்வாழ்வையும்வரவழைப்பதாகும். மன்னிக்கும்தன்மையற்றவர்களும், இறுகியஇதயம்கொண்டவர்களும்தான் அதிகமாகத்துன்பப்படுகிறார்கள்என்றுகூறினால்பலருக்கும்ஆச்சிரியமாகஇருக்கும். ஆனால்அதுசந்தேகத்திற்கு இடமளிக்காதஉண்மையாகும். காரணம்ஒன்றைஒன்றுஈர்க்கும்என்றவிதியின்அடிப்படையில்மற்றவர்களின் வெறுப்பைத்தங்கள்மீதுஈர்த்துக்கொள்கிறார்கள்என்பதுமட்டும்அல்ல, அவர்களதுஅந்தஇறுகியஇதயமே துன்பங்களைத்தொடர்ந்துஏற்படுத்தும்ஒன்றாகவிளங்குகிறது. சகமனிதனுக்குஎதிராகத்தன்இதயத்தை இறுகியதாக்கிக்கொள்ளும்ஒவ்வொருமுறையும்மனிதன்தன்மீதுஇந்தஐந்துவகையானதுன்பங்களைஏற்படுத்திக்கொள்கிறான். – அவை

– அன்பைஇழப்பதால்வரும்துன்பம்

– நல்லுறவு, நட்புஇன்பமாகக்கூடிவாழ்வதைஇழப்பதால்வரும்துன்பம்

– குழப்பமானமனதால்வரும்துன்பம்

– ஆணவமோ அகம்பாவ உணர்வுகள் பாதிக்கப்படுவதாக எண்ணுவதால் வரும் துன்பம்.

– மற்றவர்கள் வழங்கும் தண்டனையால் வரும் துன்பம்.

மன்னிப்பை வழங்க மறுக்கும் ஒவ்வொரு முறையும் தன்னை நோக்கி இந்த ஐந்து வகைத் துன்பங்களையும் ஒருவன் வரவழைத்துக் கொள்கிறான். ஆனால் மன்னிப்பை வழங்கும் ஒவ்வொரு முறையும் ஐந்து வகையான பேரருள் நிலைகள் தன்னைத் தேடி வரும் படி செய்கிறான்.

– அன்பின்பேரருள்

– நல்லுறவு, நட்புஇணக்கமாகக்கூடிவாழ்வதுஆகியவற்றால்ஏற்படும்பேரருள்

– அமைதியான, நிம்மதியானமனதால்ஏற்படும்பேரருள்

-ஆணவ அகம்பாவ உணர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டு  மீள்வதால் ஏற்படும் பேரருள்.

– மற்றவர்கள் பொழியும் அன்பு, நல்லெண்ணம் என்னும் பேரருள்.

மன்னிக்கும் பெருமனதும், பேருள்ளமும் இல்லாத காரணத்தால் தகிக்கும் சூட்டில் தவிக்கும் சித்திரவதையைப் போல் எவ்வளவோ மக்கள் இன்று தவிக்கிறார்கள். மன்னிப்பு வழங்காத மனதை முயற்சி செய்து கைவிடும் போது தான் அவர்கள் இத்தனை காலமும் எத்தகைய கொடுமையான எஜமானனின் கட்டளைக்கு அடிபணிந்திருந்தார்கள் என்று உணர்வார்கள். மன்னிக்காத மனம் என்னும் எஜமானனை கைவிட்டு மன்னிக்கும் மனம் என்னும் எஜமானனுக்குக் கீழ்ப்படியும் போது தான் – ஒன்று எவ்வளவு கொடுமையானது, மற்றொன்று எவ்வளவு இனிமையானது என்று புரியும்.

உலகின் துன்பங்களை மனிதன் ஆழமாக நினைத்துப் பார்க்கட்டும். மனிதர்கள் தனித் தனியாகவும், பிரிவு பிரிவுகளாகவும் மாறி தமக்குள்ளும், அண்டை வீடுகள் மீதும், அண்டை நாடுகள் மீதும் ஒருவர் மீது ஒருவர் போராட்டமும் பதில் தாக்குதலும் தொடுத்த வண்ணம் எப்படி வாழ்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கட்டும் . அதன் விளைவாக வரும் மன வருத்தங்களை, சோக கண்ணீர் துளிகளை, நெஞ்சில் தாங்க முடியாத பாரத்தைச் சுமத்தும் பிரிவுகளை, தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுவதை, இரத்தமும் சிந்தப்படுவதை, அதன் காரணமாக ஏற்படும் சொல்ல எண்ணா துயர்கள் போன்றவற்றை மனிதன் உள்ளத்தில் ஆழமாக எண்ணிப் பார்க்கட்டும். எண்ணிப் பார்த்தால், பின்பு ஒரு போதும் மனக் கசப்பை விதைக்கும் இழிவான எண்ணங்களை எண்ண மாட்டான். அடுத்தவர்களின் செயல்களைக் கண்டு வன்முறையைக் கையில் எடுக்கமாட்டான். மன்னிக்கும் தன்மையுடன் எல்லா உயிர்களையும் காண்பான்.

”ஒவ்வொரு உயிரின் மீதும், நல் எண்ணத்தோடு வாழுங்கள்,

இரக்கமின்மையும், பேராசையும், கோபமும் இறந்து போகட்டும்.

தழுவும் இளம் தென்றல் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும்.”

ஒரு மனிதன் பதில் தாக்குதலைக் கைவிட்டு மன்னிப்பின் வழியைப் பற்றும் போது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறான். மன்னிக்க மறுக்கும் தன்மை என்பது அறியாமையும் இருளும் ஆகும். தெளிந்த அறிவையோ, மெய்யறிவையோ பெற்றவர்கள் அந்த அறியாமை இருளுக்குள் இறங்க மாட்டார்கள். ஆனால் அதை விட்டு மேல் எழுந்து  வரும் வரை, சிறந்த ஒன்றைப் பின்பற்றும் வரை அந்த அறியாமை இருள் எத்தகைய அடர்த்தியான இருள் என்று ஒருவனால் உணர்ந்துக் கொள்ள முடியாது. மனிதனது இருள் படிந்த பாவம் இழைக்க விழையும் எண்ணங்களும் தூண்டுதல்களுமே அவனுடைய கண்களை மறைக்கின்றன. அவற்றால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். மன்னிக்க மறுக்கும் தன்மையை அவன் கைவிடுகிறான் என்றால் அவன் ஆணவத்தைக் கைவிடுகிறான். தன் வெறித் தனத்தைக் கைவிடுகிறான். ஆழ வேரூன்றியிருக்கும் தான் என்ற முக்கியத்துவத்தைக் கைவிடுகிறான். அகம்பாவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் தேவையின்றி இருக்கிறான். இதை அவன் செய்யும் போது உயர்வாழ்வும், பரந்த ஞானமும் தூய மெய்யறிவும் அவற்றின் முழு அழகோடும், ஒளியோடும் வெளிப்படுகிறது. இது வரை இவற்றை அவனது ஆனவ, அகங்காரம் என்னும் திரையே முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தது.

இதற்கு அடுத்ததாக சிறிய வகைச் சண்டைகள், அவ மதிப்புகள், ஏளனங்கள் போன்றவைகள். ஆழப் பதிந்துள்ள வன்மம்,வெறுப்பு,பழி வாங்குவது போன்று இவை அந்த அளவு கொடிய பாவங்கள் இல்லை என்றாலும், இவற்றால் ஒருவனது குணம் கீழே சரிகின்றது. உள்ளம் சிக்கல்களான எண்ணங்களால் பின்னப்பட்டுத் தளர்ச்சியடைகின்றது. தான் என்ற அகம்பாவம், தன் முக்கியத்துவம் என்ற தற்பெருமை, வெற்று ஆரவாரம் என்னும் பாவங்களே இதற்குக் காரணமாகும். தான் என்னும் மமதையில், தன் போலித் தன்மையை உண்மை என்று நம்பும் மாய வலையில் விழுபவன் தன்னைக் குறித்த மற்றவர்களின் செயல்களிலும், மனோபாவங்களிலும் தொடர்ந்து ஏதோ ஒன்றைக் கண்டு எதிர் நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறான். அந்த மாயையில் அதிகமாகச் சிக்கிக் கொள்பவன் நடக்காத தவறை நடந்ததாகக் கற்பனை செய்து அதை மிகைப்படுத்தியும் கொள்வான். மேலும், சிறுசிறு மனக்கசப்புகளுடன் தொடர்ந்து வாழ்வது வெறுப்பு வேரூன்ற, வழி வகுக்கும். இன்னும் அதிகச் சுய மாயையில், இருளில், துன்பத்தில் படிப்படியாக அழைத்துச் சென்று விடும்.

வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் . அவ்வாறு எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணர்வுகள் காயம் பட அனுமதிக்காதீர்கள் (அல்லது) ஆணவ அகம்பாவத்திலிருந்து  விடுபடுங்கள் .

 

வன்முறையை அடுத்தவர்கள்  கையில் எடுக்க காரணமாகி விடாதீர்கள். அப்படி என்றால் பரந்த உள்ளத்தோடு கனிவாக மன்னிக்கும் குணத்தோடு எல்லோரிடமும் நடந்து கொள்ளுங்கள்  (அல்லது) மற்றவர்களது உணர்வுகளைக் காயப்படுத்தாதீர்கள் .

 

ஆணவத்தையும், தற்பெருமை எண்ணங்களையும் வேரோடு மண்ணாகக் களைந்து எறிவது என்பது மிகக் கடினமான செயல் தான் என்றாலும் அது ஆசிர்வதிக்கப்பட்ட அரும் பெரும் செயல். அந்தச் செயலை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஒருவன் தன் எண்ணங்களை, செயல்களைக் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பும், காழ்ப்புணர்வும் உள்ளே புகமுடியா வண்ணம் தொடர்ந்து பரிசுத்தப்படுத்திக் கொண்டவாறு இருக்க வேண்டும். ஆணவத்திலிருந்தும், தற்பெருமை எண்ணங்களிலிருந்தும் எந்த அளவிற்கு விடுபட்டு மீண்டு வருகிறானோ அந்த அளவிற்கு மன்னிப்பு என்னும் மலர் அவனுள் மலர்கின்றது.

வன்முறையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும், வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதும் எப்போதும் ஒன்றாகவே செல்லும். ஒருவன் மற்றவர்களது செயல் பாடுகளினால் கடும் சீற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதால், அவர்களுக்குரிய பாதுகாப்பை , அன்பை ஏற்கெனவே அவன் வழங்கிவிட்டான். தனக்கு முன்பு அவர்களை , தனது பாதுகாப்பை விட அவர்களது பாதுகாப்பை கருதுகிறான். அத்தகைய மனிதன் தன்னுடைய எல்லாச் சொல்லிலும், செயலிலும் கனிவாகவே இருப்பான். மற்றவர்களிடம் இருக்கும் அன்பையும், கனிவையும், மேல் எழச் செய்வான். அவர்களிடையே தீய எண்ணங்கள், வெறிச் செயல்களைத் தூண்டிவிட மாட்டான். தன்னைக் குறித்த பிறரது செயல்களைக் கண்டும், அவன் அஞ்ச மாட்டான். எவன் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லையோ, அவன் யாருக்கும் அச்சப்படவும் மாட்டான். ஆனால் மன்னிக்கும் தன்மையற்ற மனிதன், தனக்கு ஏற்பட்டதாகக் கருதும் உண்மையான அல்லது கற்பனையான அவமதிப்பிற்கோ, காயத்திற்கோ பதிலடி வழங்க மிக ஆவலாகக் காத்திருப்பான். தன்னைப் பற்றியே முதலில் கருதுபவன் மற்றவர்களைக் கனிவோடு கருத மாட்டான். எதிரிகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவன் மற்றவர்களைத் தாக்க நினைப்பது போல மற்றவர்களும் அவனைத் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே அவன் வாழ்வான். பிறருக்குத் தீங்கு விளைவிக்க எண்ணுபவன் பிறரை கண்டு அஞ்சுவான்.

”வெறுப்பு என்றுமே, பதிலுக்கு வெறுப்பதால் முடிவுக்கு வந்தது இல்லை.

வெறுப்பு அன்பால் தான் என்றுமே முடிவுக்கு வந்துள்ளது.”

பழங்கால இந்தியாவில் குரு ஒருவர் தன் சீடர்கள் மனதில் இந்தப் பேருண்மையைப் பதிய வைக்க இளவரசன் திர்காயுவை பற்றிய அழகான கதை ஒன்றைக் கூறுவார். அந்தக் கதை பின்வருமாறு :

பிரம்மதத்தன் என்பவன் காசியை ஆளும் வலிமை மிகுந்த மன்னன் ஆவான். சிறிய நாடான கோசலை நாட்டைத் தன் நாடோடு இணைத்துக் கொள்ள அதை ஆளும் திரிகேதியின் மீது அவன் போர் தொடுத்தான். பிரம்மதத்தனின் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிவது முடியாத காரியம் என்று உணர்ந்த திரிகேதி தன்  நாட்டை விட்டுத் தலைமறைவானான்.எதிரிகள் அவன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். சிறிது காலத்திற்கு மாறு வேடத்திலேயே ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று கொண்டு இருந்தான் திரிகேதி. இறுதியில் ஒரு கைவினை கலைஞனின் குடிலில்தன் அரசியுடன் தஞ்சம் புகுந்தான். அரசி ஓர் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அவர்கள் அவனைத் திர்காயு என்று அழைத்தனர்.

 

இப்பொழுது பிரம்மதத்த மன்னனோ, தலைமறைவு ஆகி விட்ட திரிகேதியை கண்டு பிடித்துக் கொன்று விடத் துடித்துக் கொண்டு இருந்தான். ”அவனது நாட்டை அபகரித்துக் கொண்டதால் என்னைப் பழி வாங்க மறைந்திருந்து சதி செய்து என்றாவது ஒரு நாள் என்னைக் கொன்று விடுவான், அதற்கு முன்பு நான் அவனைக் கொன்றுவிட வேண்டும்”என்றிருந்தான்.

 

ஆனால் பல ஆண்டுகள் கடந்து விட்டன. திரிகேதியோ தன் மகனை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். அவன் மகனும் கல்வியையும், கலைகளையும் கண்ணும் கருத்துமாகக் கற்று சிறந்து விளங்கினான்.

சிறிது காலத்தில் திரிகேதியை பற்றிய இரகசியம் மெல்லக் கசிய ஆரம்பித்தது. பிரம்மதத்தன் இதை அறிந்து, தன் குடும்பத்தின் மூவரையும் கொன்று விடுவானோ எனத் திரிகேதி அஞ்சினான்.தன் மகனின் பாதுகாப்பைக் பெரிதாகக் கருதியதால்  அவனைத் தன்னை விட்டு பிரிந்து செல்லுமாறு பணித்தான். விரைவிலேயே திரிகேதியும் அவனது மனைவியும் பிரம்மதத்தனால் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இப்பொழுது பிரம்மதத்தன் நினைத்தான்,”நான் திரிகேதியிடமிருந்தும் அவன் மனைவியிடமிருந்தும் விடுபட்டுவிட்டேன். ஆனால் இளவரசன் திர்காயு இன்னும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறான். அவன் என்னைக் கொல்ல ஏதாவது சதி திட்டம் தீட்டுவான். அவனைப் பற்றி அறிந்தவர்கள் யாரும் இல்லை. அவன் யார் என்று கண்டுபிடிப்பதற்கு வழியும் இல்லை” எனப் மன்னன் பிரம்மதத்தன் மிகுந்த அச்சத்துடனும், மனக் கலக்கத்துடனும் வாழ்ந்து வந்தான்.

 

திர்காயு தன் தாய் தந்தையின் மரணத்திற்குப் பின், வேறு ஒரு பெயரை வைத்துக் கொண்டு மன்னன் பிரம்மதத்தனின் யானை தொழுவத்திலேயே பணிக்கு அமர்ந்தான். யானைகளின் தலைமை பாகன் அவனுக்கு வேலைகளை வழங்கினான்.

திர்காயு வெகு சீக்கிரமே எல்லோரின் அன்பிற்கும் உரியவன் ஆனான். அவனது ஆற்றல்களும் திறமைகளும் இறுதியில் மன்னனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. திர்காயு மன்னனைக் காண்பதற்கு அழைத்து வரப்பட்டான். திர்காயுவை கண்ட உடனேயே மன்னனுக்கு அவனை மிகவும் பிடித்துப் போகத் தன் அரண்மனையிலேயே அவனுக்கு வேலையை வழங்கினான். திர்காயுவும் அந்தப் பொறுப்புகளைத் திறமையாக, சரியாக நிறைவேற்ற மிக நம்பிக்கைக்குரிய பொறுப்பு ஒன்றில் தனது கீழ் மன்ன்ன் அவனை வைத்துக் கொண்டான்.

ஒரு நாள் தனது வீரர்களின் ஒரு பிரிவை அழைத்துக் கொண்டு மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது அவன் மற்ற எல்லா வீரர்களையும் பிரிந்து தனியே சென்று விட்டான்.திர்காயு மட்டுமே அவனுடன் இருந்தான். மன்னனும் களைப்பில் சோர்ந்து திர்காயுவின் மடியில் தலையை வைத்துப் படுத்து உறங்கினான்.

அப்பொழுது திர்காயு நினைத்தான், ”மன்னன் எனக்குப் பெரும் தீங்கு இழைத்து உள்ளான். என் தந்தையின் நாட்டை அபகரித்து உள்ளான்.என் தாய், தந்தையைக் கொன்று இருக்கிறான். இப்பொழுது அவன் என் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறான்”. பிரம்மதத்தனை கொல்ல எண்ணி தன் வாளை உருவினான். ஆனால் பழி வாங்குவதை விட மன்னிப்பதே எப்போதும் சிறந்தது என அவன் தந்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்ததை நினைத்துப் பார்த்து தன் வாளை மீண்டும் உறையில் வைத்துக் கொண்டான்.

நிம்மதியான தூக்கமின்றி மன்னனும் ஒருவாறு விழித்து எழுந்தான். மன்னன் ஏன் மிகவும் அச்சத்துடன் காணப்படுவதாகத் திர்க்காயு வினவினான். அதற்கு மன்னன், ”என் தூக்கம் எப்போதும் நிம்மதியற்றே இருக்கிறது. நான் திர்காயுவின் பிடியில் இருப்பதாக , அவன் என்னைக் கொன்று விடத் துடிப்பதாக அடிக்கடி எனக்குக் கனவு வருகிறது.முன்பு எப்போதும்இருந்ததை விட இப்பொழுது இங்கு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது மிக அதிக அதிர்வுடன் அந்தக் கனவு எனக்கு வந்து திகிலையும் பயத்தையும் அளித்தது” என்றான்.

அவன் தான் திர்காயு என்பதை அறியாத மன்னனிடம் திர்காயு தன் வாளை உருவி ”நான் தான் இளவரசன் திர்காயு, நீங்கள் இப்பொழுது என் கட்டளைக்குக் கீழ் இருக்கிறீர்கள். பழி தீர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என்றான்.

மன்னன் அவன் காலில் அடிபணிந்து அவனிடம் உயிர்ப் பிச்சை வேண்டினான். அப்போது திர்காயு ”மன்னனே, நீங்கள் தான் எனக்கு உயிர் பிச்சை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக நீங்கள் தான் என்னைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது நான் உங்கள் கண் முன் இருக்கிறேன். என்னை உயிரோடு விடும்படி கேட்கிறேன்” என்றான்.

அந்த நொடியே பிரம்மதத்தனும் திர்காயுவும் ஒருவருக்கு ஒருவர் உயிரை தானமாக வழங்கிக் கொண்டார்கள். இருவரும் ஆரத் தழுவிக் கொண்டு இனி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளக் கூடாது என்று உறுதி ஏற்றார்கள். திர்காயுவின் சிறந்த மன்னிக்கும் குணத்தால் மன்னனின் உயர் குணங்கள் மேல் எழுந்தன. அவன் தன் மகளைத் திர்காயுவிற்கு மணமுடித்து அவன் பறித்துக்கொண்ட அவன் தந்தையின் இராஜ்ஜியத்தை அவனிடமே ஒப்படைத்து விட்டான்.

இவ்வாறு வெறுப்பு என்பது பதிலுக்கு வெறுப்பதால் அல்ல, மன்னிப்பதாலயே முடிவுக்கு வருகிறது, பழிக்குப் பழி என்பதை விட மிக அதிகம் உணர்த்தக் கூடியது மன்னிப்பு என்ற மிக அழகான இனிமையான ஒன்று. மன்னிப்பு என்பது தனக்காக எதையும் வேண்டாத தெய்வீக அன்பின் ஆரம்பமாகும். மன்னிக்க முயற்சி செய்து அந்தக் குணத்தை வளர்த்துக் கொள்பவன் இறுதியில் அது பரிசாகத் தரும் பேரருள் நிலையை உணர்ந்து கொள்வான். அந்தப் பேரருள் நிலையில் ஆணவத்தின், தற்பெருமையின், காழ்ப்புணர்வின், பதில் தாக்குதல்களின் வெப்பம் எல்லாம் தணிந்து அணைக்கப்பட்டு இருக்கும். நல்லுறவும் நிம்மதியும் குறைவின்றி நிலைத்திருக்கும். அந்த சாந்தமான நிலையில், அமைதியான ஆனந்தத்தில் இனி தேவையில்லை என்ற காரணத்தால் மன்னிப்பு என்பது கூட மறைந்துவிடும். அந்த நிலையை அடைந்தவன் மற்றவர்களைக் கண்டு வெறுப்பதற்கு எந்தத் தீங்கையும் அவர்களிடம் காண மாட்டான். அவன் காண்பது எல்லாம் அவர்களை மூழ்கடித்துள்ள அறியாமைகளையும் ,மாயத் தோற்றங்களுக்கு மயங்குவதையுமே. அவற்றை அவன் வெறுக்கவும், பதில் தாக்குதல் நடத்தவும், வன்முறைகளில் ஈடுபடத் தூண்டிவிடும் மனநிலைகள் இருந்தால் தான் அதைத் தடுக்க மன்னிப்பு அவனுக்குத் தேவைப்படுகிறது. அது எதுவும் இல்லாத காரணத்தால் மன்னிப்பின் தேவையின்றி அவன் அவர்கள் மேல் இரக்கம் கொள்கிறான். எல்லாவற்றையும் பொதுவாகப் பாவித்து அன்பை வழங்குவதே வாழ்வின் நீதி.அந்த நிலையே வாழ்வின் மற்ற குறைகளைச் சரி செய்யும். மன்னிப்பு என்பது தெய்வீக அன்பு என்னும் குறைகளற்ற கோயிலின் வாயில் கதவுகளில் ஒன்று.

 

Share This Book

Feedback/Errata

Comments are closed.