5 மனச்சுமையை இறக்கி வைப்பது

 

என்னைப் பொறுத்தவரை வாழ்வு என்பது  இது தான் ;

அது ஒரு வேளை  மிக சுமையாக இருந்தால் என்றால்,

சுமைகளைஇறக்கும் போது  பாடப்படும்மகிழ்ச்சிபாடல்களாக

வாழ்வை நான் கூடி சேர்ந்து மாற்றுவேன்.

…பெய்லி

 

வெல்கின்ற நாளை நன்மையானது என்று கூறக் கேட்டு இருக்கிறீர்களா? வீழ்வதும் நன்மையானதே என்று நான் இன்னொன்றும் கூறுகிறேன். போர்க்களத்தில் போராடி வெல்வதைப் போன்றதே தான்  போர்க்களத்தில் போராடி  விழுவதும்.

..வால்ட்விட்மேன்

சுமைகளைத் தாங்குவது பற்றி நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம், படிக்கிறோம். ஆனால் அதை விடச் சிறந்த வழியான சுமைகளை இறக்கி வைப்பது பற்றி நாம் மிகக் குறைவாகவே கேள்விப்படுகிறோம் அல்லது அறிகிறோம். லேசான இதயத்தோடும் முகமலர்ச்சியோடும் சகமனிதர்களிடையே செல்ல வழி இருக்கும் போது நெஞ்சை அழுத்தும் மனச் சுமைகளோடு ஏன் உலாவ வேண்டும்? எவரும் எந்த ஒரு சுமையையும் ஏதோ காரணத்திற்காகத் தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்காகச் சுமக்கின்றார்களே தவிர, தேவையில்லாமல் சுமைகளைத் தோளில் ஏற்றிக் கொள்வதில்லை.பின்பு எல்லோரும் தன்னைச் சுமைதாங்கியாகப் போற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமில்லை. தேவையற்ற பாரத்தை உங்கள் மனதில் ஏன் ஏற்றிக் கொள்கிறீர்கள்? அந்தச் சுமையை அதிகப்படுத்தும் தீங்குகளான உங்கள் மீது நீங்களே பரிதாபம் கொள்வதும் இரக்கம் கொள்வதும்          எதற்கு? தேவையற்ற மனச்சுமைகளை விலக்கி அதன் உடன் வரும் சுய பரிதாபத்தையும், தன் இரக்கத்தையும் ஒதுக்கித் தள்ளி,நீங்கள்முதலில் மகிழ்ச்சியாகி உலகின் மகிழ்ச்சிக்கு ஏன் நீங்கள் பங்கு ஆற்றக் கூடாது? தேவையற்ற மனச்சுமைகளைத் தொடர்ந்து சுமப்பதை எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது. புறம் சார்ந்த பொருள் உலகில் ,ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும் காரணத்திற்காகத் தான் தூக்கப்படுகிறது. ஒரு நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தான் தூக்கப்படுகிறதேயன்றி வீணாக வருந்திக் கொண்டு யாரும் அதைத் தூக்கித் திரிவதில்லை. மன உலகிலும் அப்படிதான். ஒரு நல்ல நோக்கத்திற்காக மனதில் பாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நிறைவேறும் போது அதை இறக்கி வைத்து விடவேண்டும். இவ்வாறு எண்ணும் போது அந்தப் பாரமானது மனதை அழுத்துவதற்குப் பதில் ஊக்க்கப்படுத்தி மகிழ்ச்சியாகச் செயல்படுவதற்குத் தூண்டுதலாக இருக்கும்.

சமய விஷயங்களுக்காகச் சிலர் உடலை அளவுக்கு மீறி வருத்திக் கொள்வது தேவையற்றது என்கிறோம். பலரோ மனதை அளவுக்கு மீறி வருத்திக் கொள்கின்றனர். அதுவும் தேவையற்றதும், வீணானதுமே ஆகும்.

துக்கத்தையும், கவலையையும் வழங்கும் சுமை எங்கே இருக்கின்றது?அது எங்குமே இல்லை. ஒன்று செய்யப்பட வேண்டும் என்றால் மகிழ்ச்சியுடன் செய்யப்படட்டும். உள்ளுக்குள் புலம்பியவாறும், விருப்பமின்றியும் செய்யப்படக்கூடாது. இன்றியமையாதவற்றை நன்பனாகவும், வழிகாட்டியாகவும் கொள்வது புத்திசாலித்தனமாகும். இன்றியமையாதவற்றை எதிரியாக நினைத்து முகத்தைத் சுளிப்பதும் திருப்பிக் கொள்வதும், அதை ஒதுக்குவதும் அல்லது எப்படியாவது அதிலிருந்து தப்பிவிட முயல்வதும் முட்டாள்தனமாகும். நாம் நமக்கு உரியவற்றையே திரும்பும் திசை எங்கும் சந்திப்போம். நமது கடமைகளை ஏற்றுக் கொள்ளவும், தழுவிக் கொள்ளவும் மறுக்கும் போது தான் அவை நம்மை அழுத்தும் சுமைகளாக உருமாறுகின்றன. கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றை வேண்டா வெறுப்புடன் முணுமுணுத்தவாறு செய்து கொண்டு அப்பொழுதுகளில் எல்லாம் தேவையற்ற சுகபோகங்களை அனுபவிக்க ஏங்குகின்றவன் தன்னை ஏமாற்றம், துக்கம் என்னும் தேள்கள் கொட்ட வழிவகைகளைச் செய்து கொள்கிறான். தன் மீது இருமடங்கு சுமையை ஏற்றிக் கொண்டு நிம்மதியின்றிச் சோர்வோடு தவித்தவாறு இருக்கிறான்.

 

மனமே, மேன்மையானவற்றிற்காகவிழித்தெழு

வானுயரத்தை அடைய உன் சிறகை விரி.

புதிய வாழ்வை வாழ சிறந்த வழிகாட்டிகளை ஏற்றுக்கொள் .

நன்மையின் பாடல்களைப் பாடு .உண்மையின் பாடல்களைப் பாடு .

தீமைகள் மீது முழு வெற்றிக்கொள்ளும் பாடலைப் பாடு.

இனிமையான பாடல்களால் உன்னை வளமாக்கிக் கொள்!

 

உங்களால் ஏற்றுச் செயல்பட முடியுமா? என்று சவால் விடும் பொறுப்புகளை மலைப்பை ஏற்படுத்தும் பொறுப்புகளை கவனமாக செய்து வலிகளை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாகப் புன்னகை என்னும் ஆடையை நெய்து அணியுங்கள்.

முள் கிரீடத்தால் முடி சூட்டினாலும் பேரானந்தமாகக் காட்சியளியுங்கள்.

 

 

என்னுடைய சிதறாத முழுக் கவனத்தைத் தன்னல நோக்கங்கள் ஏதுமின்றி என் வாழ்வில் அமைந்துள்ள எல்லாக் கடமைகளுக்கும் மகிழ்ச்சியாக வழங்குவேன். பல நெருக்கடியான பொறுப்புகள் என்னைச் சூழ்ந்தாலும் அந்தப் பொறுப்புகளின் பாரமும் பிரச்சினைகளின் எடையும் என்னுள் எந்தக் கலக்க உணர்வையும் ஏற்படுத்தா வண்ணம் நான் வாழ்வேன் என்று வாழுங்கள்.

ஒரு குறிப்பிட்ட விஷயம் (ஒரு கடமை, உங்களுடன் இருக்கும் ஒரு கூட்டாளி அல்லது ஒரு சமூகப் பொறுப்பு) மிகவும் பிரச்சினையாகச் சுமையாக இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். ”இதற்குள் காலை வைத்து விட்டேன், எப்படியும் முடித்தாக வேண்டும். ஆனால் அது தாங்க முடியாத சுமையாக இருக்கிறது” என்று ஒருவாறு சமாதானப் படுத்திக்கொண்டு, ஆனால் உங்கள் எண்ணங்களை அதற்கு எதிராக வளர்த்துக்  கொள்கிறீர்கள். அது உண்மையிலயே பாரமாக இருக்கிறதா அல்லது உங்களது சுயநலம் உங்களை போட்டு அழுத்துகிறதா ? உங்களது திறமைகளை கட்டுப்படுத்துவதாக நீங்கள் கருதி தவிர்க்க நினைக்கும் அந்த  கடமை தான் உங்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயில் ஆகும். அந்த நல்வழியை நீங்கள் சென்று அடைய முடியாத திசைகளில், உங்களை நாடாத மற்றவற்றில் வீணாகத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் காணும் அனைத்துமே உங்களைப் பிரதிபலிக்கும் நிலை கண்ணாடிகள் தான். ஒரு கடமையில் நீங்கள் காணும் இருள் படிந்த பகுதிகள் என்பது அந்தக் கடமையை நோக்கும் உங்கள் மன நிலையில் உள்ள இருள் படிந்த பகுதிகளின் பிரதிபலிப்பே. அந்தக் கடமையை, சுயநலமற்று நோக்கும் சரியான மனநிலையைக் கொண்டுப் பாருங்கள். ஓ! அந்தக் கனமே அது வலிமையையும், அருளையும் வழங்கும் ஒன்றாக மாறிக் காட்சியளிக்கும். நீங்கள் எந்த மனநிலையில் அதை நோக்கினீர்களோ, அதையே அது உங்களிடம் பிரதிபலிக்கிறது. உங்கள் சுளித்த முகத்தைக் கண்ணாடி முன் கொண்டு வந்து விட்டு கண்ணாடியை குறை சொல்வீர்களா? அல்லது முகத்தைச் சுளிக்காமல் கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்து மகிழ்வீர்களா?

ஒரு குறிப்பிட்ட செயலை செய்வது தான் சரி , அது கட்டாயம் செய்யப்பட  வேண்டும் , அந்தச் செயலை செய்து முடிப்பதால் நன்மை ஏற்படும் என்னும் சூழ்நிலையில் அது ஒரு சுமையாகக் கருதப்பட்டால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் :- அது அந்தச் செயலை செய்ய விருப்பமின்மையே ஆகும். அந்தச் செயலிலிருந்து தப்பிக்க வேண்டும் என்னும் சுயநல நோக்கத்தால் அந்தச் செயல் ஒரு தீங்கை போல் தோற்றமளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட செயல் செய்யப்படுவது தவறு, அது செய்யப்படுவதற்கு எந்த இன்றியமையாத தேவையுமில்லை , இருந்தும் சுயநல நோக்கங்களுக்காக அந்த செயல் மேற்கொள்ளப்பட்டால் அது முட்டாள்தனமாகும். அது பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.

நீங்கள் புறக்கணிக்கும் கடமையோ உங்களைக் கடிந்து உரைத்து  உங்களை நீங்கள் நிரூபித்து நிமிர்ந்து நிற்க உதவும் தேவதையாகும். நீங்கள் தேடி ஓடும் சுகமோ உங்களைப் வீணாக புகழ்ந்து  உங்களை கவிழ்க்கத் துடிக்கும் எதிரியாகும். முட்டாள் மனிதனே! எப்போது அறியாமையைக் கைவிட்டு அறிவைப் பற்றப் போகிறாய்?

இந்தப் பிரபஞ்சம் அதன் எல்லா உயிர்களும் அறிவின் வழிக் காட்டலை பெறவேண்டும் என்றே எந்த இடத்திலும், எல்லா நேரத்திலும் விளைகின்றது. ஒரு உயிர் அதன் அணுக்கள் எல்லாம் சிதறாமல் கூட்டாக இருக்க வேண்டும் என்று செயல்படும் அடிப்படை காரணமே இதற்கும் காரணமாகும். இது இந்த முழுப் பிரபஞ்சத்தின் நன்மைக்காகவே. அறிவீணத்தின், சுயநலத்தின் அளவுக்கு ஏற்ப துன்பம் ஏற்படுவது நன்மையை நிலை நாட்டுவதற்காகவே. அக்கறையின்மையை எதிர்க்க வேண்டும், மெய்யறிவை பெற வேண்டும் என வலியுறுத்தவே  வேதனை வருகின்றது.

 

எது வேதனை? எது துன்பம்? எது சுமை?

கட்டுப்படாத உணர்வு தான் வேதனை.

அறிவீணம் தான் துன்பம்.

சுயநலம் தான் சுமை.

 

நம்எண்ணங்களும்செயல்களும்முடிந்தஉடன்

அதற்காகநம்மைவருந்தவும், கலங்கவும், துடிக்கவும்செய்வது

அகம்பாவம் கொண்ட இருண்ட சுயநல மனமே.

 

கட்டுப்படாத உணர்வுகளை, அறிவீணங்களை, சுயநலத்தை உங்கள் மனதிலிருந்தும், நடத்தையிலிருந்தும் நீக்குங்கள். துன்பத்தையும் , வேதனையையும் உங்கள் வாழ்விலிருந்து நீக்குவீர்கள். மனச்சுமையை இறக்கி வைப்பது என்பது மன ஆழத்தில் உள்ள சுயநலத்தைக் கைவிட்டு அந்த இடத்தில் தூய்மையான அன்பை வைப்பதே ஆகும். உங்களது கடமையை நிறைவேற்ற உள்ளத்தில் அன்புடன் செல்லுங்கள்.நீங்கள் மகிழ்ச்சி பொங்க , இதயத்தில் பாரமின்றி சிறகடித்து செல்வீர்கள்.

மனம் தன் அறியாமையால், பாரமான சுமைகளைத் தானே உருவாக்கி தன் மீது ஏற்றிக் கொள்கிறது.தனக்குத் தானே தண்டனைகளை வழங்கிக் கொள்கிறது. யாரும் பாரங்களைச் சுமந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டு இருக்கவில்லை. துக்கம் யார் மீதும் கண்மூடித்தனமாகச் சாற்றப்படவில்லை. இவை எல்லாம் மனதின் உருவாக்கமே. அறிவின் வெளிச்சமே மன பிரதேசத்தை ஆள வேண்டிய நல்அரசன் ஆவான். உணர்ச்சி வேகம் அவனது அரச கட்டிலை கவிழ்க்கும் போது அங்கே குழப்பம் தலைவிரித்து ஆடுகிறது. சுகபோகக் கொண்டாட்டங்களுக்கான தவிப்பு முன்புறமிருந்தால் துக்கமும் ஏமாற்றமும் பின்புறமிருக்கும். உங்களுக்குத் தேர்ந்து எடுத்துக்கொள்ள எல்லா உரிமையும் வழங்கப்பட்டு இருக்கிறது, நீங்கள் உணர்ச்சி வேகத்தால் கட்டப்பட்டு இருந்தாலும் உதவிக்கு எதுவும் இல்லாததைப் போல உணர்ந்தாலும், உங்களைக் கட்டிக் போட்டுக் கொண்டது நீங்கள் தான். உங்கள் உதவிக்கு எதுவும் இல்லாமல் இல்லை. நீங்கள் கட்டியதை நீங்களே அவிழ்க்கலாம். நீங்கள் தற்போதைய நிலையைப் படிப்படியாக அடைந்தீர்கள். படிப்படியாக அதிலிருந்து மீளவும் முடியும். உணர்ச்சி வேகத்தை அரியணையிலிருந்து அகற்றி அங்கே அறிவின் வெளிச்சத்தை அமர்த்துங்கள். தீமையை விலக்க வேண்டும் என்றால் அதன் உடன் உறையும் சுகத்தைத் தழுவாமல் இருக்க வேண்டும் .தழுவி விட்டால் பின்பு தொடரும் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அந்த அனுபவம் உங்களுக்கு மெய்யறிவின் பாடத்தைக் கற்றுத் தர வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு முன் ஆலோசிக்க வேண்டும். ஏற்றுக்கொண்ட பின் சுயநல நோக்கங்கள், சுயநல நோக்கங்களின் கூடவே வரும் முணுமுணுப்புகள், குற்றம் குறைகள், பழி சுமத்துதல் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். பொறுப்புகளை விரும்பி ஏற்றால் அவை சுமையாக மாறாது.

மனிதனால் ஏற்க முடிந்த சுமையின் பாரம் கூடுவதற்கு காரணம் சுயநல ஆசைகளை ஈன்றெடுக்கும் பலவீணமான எண்ணங்களின் அழுத்தமே. உங்களது சூழ்நிலைகள் உங்களைச் சோதிக்கின்றன என்றால், அந்தச் சோதனைகள் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. உங்களது வலிமையை வளர்த்துக் கொள்ளச் சோதனையை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களைச் சோதிப்பதற்குக் காரணம் உங்களிடத்தில் ஏதோ ஒரு பலவீணம் உள்ளது. அந்தப் பலவீணத்திலிருந்து நீங்கள் மீளும் வரை, சூழ்நிலை உங்களைத் தொடர்ந்து சோதனை செய்து கொண்டே தான் இருக்கும். சோதனை காலத்தை உங்களது ஆற்றலையும், மெய் அறிவையும் வளர்த்துக் கொள்ள வந்த வாய்ப்பு என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.மெய்யறிவை எந்தச் சூழ்நிலையாலும் சோதனை செய்ய முடியாது. அன்பை எதுவும் தோற்கடிக்க முடியாது. உங்களைச் சோதிக்கும் சூழ்நிலையைக் குறித்து வீணாக அரற்றாமல் உங்களுடன் தொடர்பிலிருக்கும் மற்றவர்களது வாழ்வைக் குறித்தும் எண்ணிப்பாருங்கள்.

வாரம் ஒரு முறை ஊதியமாகக் கிடைக்கும் சிறு தொகையைக் கொண்டு தன்னுடைய பெரிய குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இங்கே ஒரு பெண்மணி இருக்கிறாள். துணிகளைத் துவைப்பது முதல் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறாள். தனது அண்டை வீட்டுக்காரர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களையும் சென்று பார்க்க நேரத்தை ஒதுக்குகிறாள். இவ்வளவு பொறுப்புகளையும் ஏற்று பொதுவாகத் தலைதூக்கும் இரண்டு குறைபாடுகளான கடன் கேட்கும் பழக்கம் மனச்சோர்வு கொள்ளும் பழக்கம்  இல்லாமல் அனைத்தையும் நிர்வகிக்கிறாள். காலையிலிருந்து இரவுவரை முக மலர்ச்சியுடன் இருக்கிறாள். தன்னுடைய கடினமான சூழ்நிலையைப் பற்றி யாரிடமும் குறைபட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள். அவள் எப்பொழுதும் மனநிறைவுடன் இருப்பதற்குக் காரணம் அவள் சுயநலமற்று இருப்பது தான். தன்னால் முடிந்ததைச் செய்வது, பிறருக்கு உதவுகின்றது என்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒருவேளை அவள் தனக்குக் கிடைக்காத விடுமுறை நாட்களைப் பற்றியும், கொண்டாட்டங்களைப் பற்றியும், வேலைகள் இல்லாத ஓய்வான நேரங்கள் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்; காணமுடியாத நாடகங்கள், கேட்க முடியாத இசை தட்டுகள், படிக்க முடியாத புத்தகங்கள், கலந்துக் கொள்ள முடியாத வரவேற்பு நிகழ்ச்சிகள், செய்வதற்கு வாய்ப்பில்லாத நற்செயல்கள், உருவாக்கிக் கொள்ள முடியாத நட்புகள், என இழந்த இன்னும் எத்தனையோ வகையான கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சிகளையும் பற்றிக் கொண்டு தன்னுடைய சூழ்நிலை இன்னும் கொஞ்சம் மேம்பட்டு இருந்திருந்தால் அவற்றை எல்லாம் அனுபவித்திருக்கலாமே என அவள் குறைப்பட்டுக் கொண்டிருந்தால் அவளது நிலை எவ்வளவு பரிதாபமாக ஆகி இருக்கக் கூடும். அவள் செய்து கொண்டிருக்கும் பணிகள் எவ்வளவு கடினமாகி இருக்கும். சிறிய வீட்டு வேலைக் கூட அவள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள எடைக் கல்லாகத் தொங்கிக் கொண்டு அவளைக் கீழ் இழுக்கும். அத்தகைய மனநிலையிலிருந்து அவள் வெளிவரவில்லை என்றால் தன் சுயநல எண்ணங்களாலேயே வேதனைக்கு உள்ளாவால். ஆனால் அவள் தன் ஆடம்பர ஆசைகளுக்காக வாழாமல் தன் எல்லாச் சுமைகளிலுமிருந்து இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கிறாள். மனநிறைவும் சுயநலமின்மையும் எப்போதும் இணைபிரியாத நண்பர்கள் ஆகும். அன்பிற்குக் கடினமான செயல் என்று எதுவும் கிடையாது.

தேவைக்கும் அதிகமான வருமானமும், அவற்றோடு கூடவே ஆடம்பர வசதிகளும் பிடித்த விஷயங்களைச் செய்வதற்குப் போதிய நேரமும் பெற்று இங்கே இன்னொரு பெண்மணி இருக்கிறாள். இவ்வளவு இருந்தும், தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு கடமையை நிறைவேற்றும் போது தன் நேரமும், பணமும் செலவாகின்றது , தன் கொண்டாட்டங்கள் தடைப்படுகின்றது என்று அந்தக் கடமையிலிருந்து விடுபட நினைக்கிறாள். உள்ளத்தில் அன்பு ஒழுக ஆற்ற வேண்டிய அந்தக் கடமையை – தன் மனதில் உள்ள பேராசைகளினால் அந்தக் கடமையின் மீது வேண்டாத வெறுப்பை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் எப்போதும் கொள்ளாமல் தன் நிலையை மிகவும் கடினமானதாகச் சித்தரிக்கிறாள். மன நிறைவின்மையும், சுயநலமும் பிரிக்க முடியாத தோழர்கள். நான், எனது, எனக்கு என விழைபவன் மகிழ்ச்சியாகப் பாடுபடுவதை அறிய மாட்டான்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள இரண்டு சூழ்நிலைகளில் (வாழ்வு இத்தகைய முரண்பட்ட விஷயங்களால் நிரம்பியுள்ளது) எது உண்மையில் கடினமானது? இரண்டுமே கடினமல்ல என்று கூறினால் அது உண்மை தானே? அந்தச் சூழ்நிலைக்குள் புகுந்து உள்ள அன்பின் அளவு சுயநலத்தின் அளவுக்கு ஏற்றவாறு அது நன்மையானதாகவோ, தீமையானதாகவோ மாறுகிறது. அந்த நன்மையின் அல்லது தீமையின் ஆணிவேர் அந்தத் தனி மனிதனின் மனதில் தான் ஆழ ஊடுருவியிருக்கின்றது. அந்தச் சூழ்நிலையில் ஊடுருவியிருக்கவில்லை என்பது உண்மை தானே?.

மதம், மதக் கோட்பாட்டின் சில பிரிவுகளை மற்றும் மாந்த்ரீக விஷயங்கள் குறித்துச் சமீபத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள மனிதர் ஒருவர் ”மனைவி, குடும்பம் என்று பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ பணிகளைச் செய்திருப்பேன். இப்பொழுது அறிந்த ஒன்றைப் பல வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தால் நான் திருமணமே செய்திருக்க மாட்டேன்” என்றார். அந்த மனிதர் மிகச் சிறிய ஞானத்தைக் கூட இன்னும் பெறவில்லை என்று புரிந்துக் கொள்ளலாம். காரணம் நடந்து முடிந்து விட்ட ஒன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதை விடப் பெரிய முட்டாள்தனமில்லை. அவன் செய்யத் துடிக்கும் அந்தப் பணியை, செய்து முடிக்கும் ஆற்றலும் தகுதியும் அவனுக்கில்லை. சக மனிதன் மேல் அவனுக்கு ஆழமான அன்பிருந்தால், மனித குலத்திற்காக பெரும் பணியாற்ற துடிப்பிருந்தால் அந்த அன்பும் துடிப்பும் அவன் இப்பொழுது இருக்கும் இடத்திலேயே வெளிப்படும். அந்த அன்பால் அவனது வீடு நிறைந்திருந்கும். அவனது அகம்பாவமற்ற அன்பிலிருந்து வெளிப்படும் அழகும், இனிமையும், அமைதியும் அவன் சொல்லுமிடமெல்லாம் பின் தொடரும். அவனுடன் இருப்பவர்கள் மகிழ்ச்சியை உணர்வார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்களுக்காக வெளிப்படுத்தப்படும் அன்பு, ஆனால் வீட்டில் இருப்பவர்களால் உணரப்பட முடியாததாய் இருந்தால் அதற்குப் பெயர் அன்பல்ல. அது புகழ்ச்சியின் மீது கொண்டுள்ள மயக்கமே.

வழி காட்டும் திறனில்லாத சமய பிரசங்கம் செய்பவர்களின் மகிழ்ச்சியற்ற வீடுகளையும் அன்பினால் அரவணைக்கப்படாத குழந்தைகளையும் நாம் பார்த்தது இல்லையா?அது எத்தகைய பரிதாபத்துக்குரிய காட்சியாகும்? இத்தகைய போலியான அன்பைக் கொண்டு , பிறர் நலத்திற்காகத் ,தான் துன்பத்தை ஒரு புனித சுமையாக ஏற்பதாகக் கருதி தன் மேல் இரக்கத்தை உருவாக்கிக் கொள்வது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் சுய மாயை நிலையாகும்.

ஒரு பெரிய மனம் படைத்த மனிதனாலேயே அரும்பெரும் பணியை ஆற்ற முடியும். அத்தகையவன் எங்கிருந்தாலும் பெருமனிதனாக விளங்கி எத்தகைய சூழ்நிலையிலும் அவன் செய்ய வேண்டிய சிறந்த பணியைக் கண்டறிந்து செய்துவிடுவான்.

மனிதக் குலத்திற்கு, சக மனிதனுக்கு அரும்பணி ஆற்ற வேண்டும் என்று எண்ணுபவர்களே, அந்தப் பணியை உங்கள் வீட்டில் இருந்து தொடங்குங்கள். உங்களுக்கு உதவி செய்து கொள்ளுங்கள். உங்களது மனைவிக்கு, குழந்தைக்கு, அடுத்த வீட்டில் இருப்பவருக்கு உதவுங்கள். மாயத் தோற்றங்களில் மயங்கி விடாதீர்கள். அருகில் இருப்பவற்றை , சிறிய செயல்களை நம்பிக்கையுடன் முழுமையாகச் செய்யும் திறன் இல்லாமல் தொலைவில் இருப்பவற்றைப் பெரும் செயல்களைச் திறமையாக செய்ய முடியும் என்று எண்ணாதீர்கள்.

பல வருடக்காலம் தன் இச்சைகளையும், பிறரை எண்ணாத தன் சுயநல கொண்டாட்டங்களை ஈடேற்றி வாழ்ந்தவனிடம் அவன் அத்தனை ஆண்டுகள் செய்த தவறுகள் இயற்கையின் சட்ட திட்டத்தால் அவன் மீது சுமையாக ஏறும் . அவை அவ்வாறு ஏறும் வரை அவன் அந்த இச்சைகளையும் சுயநல கொண்டாட்டங்களைப் கைவிட மாட்டான். மேன்மையான வழியில் செல்ல முயற்சி செய்ய மாட்டான். ஆனால் அவன் சிறந்த வழியினைக் காண்பதை விடுத்து, தன் மீது உள்ள சுமைகளைப் புனித சிலுவைகளைச் சுமப்பதாகப் பாவனைச் செய்யக் கூடாது அல்லது விதியும்,சூழ்நிலையும் மற்ற மனிதர்களும் தான் செய்யாத தவறிற்குத் தண்டனையை ஈவு இரக்கமின்றி வழங்குவதாக நினைத்துக் கொள்கிறான் என்றால் அவன் செய்வது வேறு ஒன்றுமில்லை, தன் முட்டாள்தனத்தால் சுமையை அதிகப்படுத்தித் துன்பப்படும் காலத்தை நீட்டித்துக் கொள்கிறான்.வலியையும்,வேதனையையும் பெருக்கிக் கொள்கிறான். தன் சுமைகள் எல்லாம் தானே தன் செயல்களால் உருவாக்கிக் கொண்டது என்னும் உண்மையை உணர்ந்து அவன் விழித்தெழ வேண்டும்.தன்மானத்திற்கு இழிவை ஏற்படுத்தும் தன்னிரக்கத்தைக் கைவிட்டு சுமைகளை இறக்கி வைக்கும் சிறந்த வழியைக் கண்டுபிடிக்கட்டும். தனது ஒவ்வொரு எண்ணமும் செயலும் தன் வாழ்வு என்னும் கோயிலை கட்டப் பயன்படும் இன்னொரு செங்கல் என்று கண்களைத் திறந்து பார்த்து உணர்ந்துக் கொள்ளட்டும். பின்பு அவனுக்குள் வளரும் உள்உணர்வால் தான் செய்யும் உறுதியற்ற செயல்களுக்குப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் அவற்றைச் சரிசெய்யும் துணிவும் சிறந்த செயல்களை மேற் கொள்ளும் உறுதியும் ஏற்படும்.

வேதனையை வழங்கும் சுமைகளை சுமக்க வேண்டிய தேவை எதுவரை என்றால் அன்பையும் மெய்யறிவையும் போதிய அளவு பெறும் வரை மட்டுமே.

துன்பங்களும் அவமானங்களும் பேரருள் கோயிலின் மதில்சுவர்களுக்கு வெளிப்புறம் உள்ள சதுக்கத்தில் இருக்கின்றன. பேரருள் கோயிலிற்குப் புனித பயணத்தை மேற்கொள்பவன் அந்தச் சதுக்கத்தைக் கடந்து வர வேண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவன் அந்தச் சதுக்கத்திலேயே உலாவுவான். தனது கண்ணோட்டத்தில் உள்ள குறைகளினால் துன்பங்களையும் அவமானங்களையும் கொண்ட சதுகத்தைக் கோயிலின் உட்பகுதி என்றே நினைத்துக் கொண்டு உலாவுகிறான்.அப்பொழுது தன்மேல் தானே இரக்கம் கொண்டு தனது துன்பங்களுக்கு ஒரு புனித சாயத்தைப் பூசிக் கொள்கிறான். ஆனால் அவன் தன் மீது கொள்ளும் சுயபச்சாதபத்தை ,தன்னிரக்கத்தைத் தூக்கி எறியும் போது அந்தத் துன்பம் என்பது கடந்து செல்லவேண்டிய வழி மட்டுமே இறுதி முடிவல்ல என்று உணர்கிறான். பின்பு வெகு விரைவில் அந்தச் சதுக்கத்தைக் கடந்து பேரருள் கோயிலிற்குள் நுழைந்து நிம்மதியில் இளைப்பாறுகிறான்.

குறையில்லாத ஒன்றிலிருந்து துன்பம் பிறப்பதில்லை.குறையுள்ள ஒன்றிலிருந்து தான் துன்பம் பிறக்கின்றது. நிறைகள் இருக்குமிடம் துன்பம் தென்படுவதில்லை. குறைகள் இருக்குமிடமே அது உரிமைக் கொண்டாடுகிறது. எனவே குறைகளைக் களைந்து அதை விரட்டலாம். குறைகள் தோன்றுவதற்கான உள்ளத்தில் உள்ள மூல காரணத்தை அறிந்து,ஆராய்ந்து கைப்பற்றி முற்றாக அதை அகற்றிவிடலாம்.

அலைக்கழிக்கப்பட்ட பின்பே அமைதி, தனியே அலைந்து திரிந்த பின்பே நிம்மதி. எனவே துன்பப்படுபவன் அந்தத் துன்பம் ஒரு கடந்து செல்ல  வேண்டிய பாதையே என்று நினைவில் கொள்ளட்டும். அது ஒரு நுழைவாயில் மட்டுமே. நிரந்தர இருப்பிடமல்ல. அதைக் கடந்த பின் வேதனையற்ற பேரானந்தத்தை உணர்வான்.

சிறிது சிறிதாக ஒரு சுமை உருவாகிறது. அறிய முடியாதவாறு துளித் துளியாக அதன் எடைக் கூடுகிறது.கண்மூடித்தனமான இச்சைகளுக்கு இணங்கி மீண்டும் மீண்டும் அதில் திளைத்த வண்ணம் இருப்பது, சுயநல கொண்டாட்டங்களுக்கு அடிமையாவது, விளைவுகளை எண்ணாமல் கணநேரம் மின்னி மறையும் உணர்வுகளை செயல்படுத்துவது, தீய எண்ணம் வளரத் துணை புரிவது, இரக்கமற்ற கொடூர வார்த்தைகளை உரைப்பது, முட்டாள் தனத்தை மீண்டும் மீண்டும் செய்வது, என்று இவை எல்லாம் இறுதியில் ஒன்று கூடி பிடித்து அழுத்தும் மிகப்பெரிய சுமையாக மாறிவிடும். ஆரம்பத்தில், சிறிது காலத்திற்கு, இதன் எடை உணர முடியாத அளவே இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூடிக்கொண்டே இருப்பதால், பிடித்து இழுக்கும் சுமையாக விரைவில் மாறிவிடும்.வாழ்வில் உண்டாகும் சோர்வில் உள்ளம் கலங்கும். சுயநலத்தின் கசப்பான கனிகள் பரிசாகக் கிடைக்கும். இந்த நேரம் வரும் பொழுது துன்பப்படுபவன் தனக்குள் உற்று நோக்கட்டும். சுமையை இறக்கி வைக்கும் நல்வழியை அவன் காணட்டும். பின்பு வாழ்வை சிறந்து வாழ மெய்யறிவை காண்பான். இனிமையாக வாழ தூய்மையைக் காண்பான்.போற்றும் வகையில் வாழ அன்பைக் காண்பான். செய்த சிறுசிறு தவறுகளினால் சுமையை ஏற்றிக் கொண்டது போலத் தவறுகளைச் சிறிது சிறிதாக சரிசெய்து சரிசெய்து சுமைகளை இறக்கி தன் நடத்தையை, செயல்பாடுகளைத் திருத்தி கனமில்லாத இதயத்தோடு நாட்களைக் கழித்து, மனநிறைவோடு செயல்பட்டு ஒளிவீசும் ஆனந்த வாழ்வை வாழ்வான்.

 

உலகத்தைவிட்டுவாருங்கள்

உலகத்திலிருந்துமேல்எழுந்துவாருங்கள்

அதன் சிலுவைகளையும், இடுகாடுகளையும் தாண்டி வாருங்கள்.

இந்தப்பசுமையானபூமிஅழகானதே

அதைநான்விரும்புகிறேன்என்றாலும்

நான்அதைத்தலைவனைப்போலவிரும்பவேண்டும்

அடிமையைப்போல்விரும்பக்கூடாது

தூசுகள்எழமுடியாதஉயரத்திற்கு

மலர்களின்நறுமணம்மட்டுமேவரக்கூடியஅந்தஉயரத்திற்குவாருங்கள்

உங்கள்வாழ்வுவியக்கும்படியானஆச்சரியமான

அழகான பொழுதுகளால் மகிழ்ச்சியாக இருக்கும்.

Share This Book

Feedback/Errata

Comments are closed.