12 தனிமையை நாடுவது

 

 

உள்ளத்தில் விடை இருக்கும் போது ஏன் புறப் பொருள்களில் அந்த விடையை வீணாகத் தேட வேண்டும்?

சொர்க்கத்தின் காட்சி அருகிலேயே கிடைக்கும் போது , தொலைவில் இருக்கும் மலையின் மேல் ஏன் வலியோடு ஏற வேண்டும்?

உள்ளம் என்னும் பள்ளத்தாக்கின் அடி ஆழத்தில் ஆழ்ந்த நினைப்பு என்னும் துறவி வாழ்கிறான். அவன் பார்வை சொர்க்கத்தைத் துளைக்கும். இரவை ஒளி மயமாக்கும் நட்சத்திரங்கள் பகலிலேயே அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

—விட்டியர்.

 

உணர்வுகள்ஓய்வுஎடுக்கும்நிசப்தமானவேளையில்

நெஞ்சம் என்னும் பெட்டகத்தில் ஞானத்தைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

 

–வெர்ட்ஸ்வர்த்

 

மனிதனின் உண்மையான இருப்பு கண்களால் காண முடியாத அவன் உள்ளத்தின் ஆன்மீக இருப்பே. அது தன் உயிர்சக்தியை, வலிமையை உள்ளிருந்தே பெற்றுக் கொள்ளும் , வெளியிருந்து அல்ல. வெளிப்புறம் என்பது அந்தச் சக்தி செலவிடப்படும் இடமாகும்.அந்த சக்தியை பெறுவதற்கும் , புதுப்பித்துக் கொள்வதற்கும் அது உள்ளத்தின் அமைதியை நாடியே செல்லவேண்டும்.

எதிலிருந்து தான் சக்தியை பெற்றுக் கொள்ள வேண்டுமோ அந்த உள்ளத்தின் அமைதியை எந்த அளவிற்கு புலன்களின் ஆசைகள் என்னும் இரைச்சலில் மனிதன் மூழ்கடிக்கிறானோ, எந்த அளவிற்கு இந்த அமைதியைப் புற உலகப் பொருட்களின் தேடலோடு மோதிக் கொள்ள அனுமதிக்கின்றானோ, அந்த அளவிற்கு அவன் வலியையும், வேதனையையும் அனுபவிப்பான். அந்த வலியும் வேதனையும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவு துன்பத்தைத் தரும் போது அவன் ஆறுதல் பெற அவனுள் இருக்கும் நிம்மதியான தனிமை என்னும் புனித தளத்தை நாடி செல்வான்.

அரிசியில்லாத நெல்லின் வெறும் உமியை உண்டு எப்படி உடலால் தாக்கு பிடிக்க முடியாதோ அது போலவே மனிதனின் உண்மையான தன்மையும் வெற்றுக் கொண்டாட்டங்களினால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது. அவ்வப்போது தகுந்த வேளைகளில் உணவு ஊட்டப்படவில்லை என்றால் உடல் தன் வலிமையையும் பொலிவையும் இழந்து பசியாலும் தாகத்தாலும் வாடி உணவிற்காகவும், நீருக்காகவும் கண்ணீர் விடும்.மனிதனின் உண்மையான உள் இருப்பும் இந்த உடம்பை போன்றது தான். அது தகுந்த கால இடைவெளிகளில் தூய்மையான, புனிதமான எண்ணங்களை உணவாக, நீராகத் தனிமையை நாடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது தன் பொலிவையும், வலிமையையும் இழந்து பசியாலும் , தாகத்தாலும் வாடி வேதனையில் கண்ணீர் விடும். தூய்மையான புனித எண்ணங்கள் என்னும் உணவைக் கொள்ள முடியாமல் உள்ளிருக்கும் ஜீவன் துக்கம் தாக்கி வேதனையில் கண்ணீர்க் குரல் இடுகின்றது. ஒளிமிகுந்த வாழ்வுக்காகவும் ஆறுதலுக்காகவும் ஏங்கும் அந்த ஜீவனின் ஏக்கமே அந்தக் கண்ணீர் குரல்.எல்லா துன்பமும் துக்கமும் ஆன்மீக உணவின் பஞ்சமே. அந்தப் பஞ்சத்தை நீக்குவதற்கான ஜீவனின் கூக்குரலே உயர் எண்ணங்கள். பசியால் வாடி மனம் திருந்திய பின்பு தான் , மகன் தன் தந்தையின் இல்லத்தை நோக்கி ஏக்கத்தோடு திரும்புவான்.

புலன் இன்ப ஆசைகளின் கொண்டாட்டத்தால் ஆன்மீக உள் இருப்பின் தூய்மையான உயிர் துடிப்புத் தொலைந்து விடுகிறது. கீழ்நிலை ஆசைகளுக்கு இடம் கொடுக்கும் போது அவை மேலும் மேலும் இடத்தைப் பிடித்துக் கொள்ள ஆர்ப்பரித்து அலைக்கழிக்கும். தினமும் பயன்படுத்தப்படும் பொருட்கள் தேய்மானம் ஆகி பழுதாகி உடையும். அணிந்து கொள்ளும் ஆடைகள் தேய்ந்து, கிழியும்., இரைச்சலான தினசரி வாழ்வின் தவிர்க்க முடியாத இன்றியமையாத செயல்பாடுகளினால் உள் இருப்பும் அது போலத் தேய்கிறது, கிழிகிறது. அந்தச் செயல்பாடுகளினால் நேர்ந்த உள்ளிருப்பின் இழப்பை ஈடுகட்ட தனிமையால் மட்டுமே உதவ முடியும். தினசரி நடவடிக்கைகளுக்குப் பின் மீண்டும் செயல்பட உடம்பிற்கு எப்படி ஓய்வு தேவைப்படுகிறதோ அது போல ஆன்மீக உள் உணர்விற்கும் அதன் இருப்பு செலவான பின்பு மீண்டும் இருப்பைப் பெறுவதற்கும் , புதுப்பித்துக் கொள்வதற்கும் தனிமை தேவைப்படுகிறது. உடல் நலத்திற்கு எப்படி உறக்கம் தேவையோ அது போல ஆன்மீக நலத்திற்குத் தனிமை தேவை. புற உலக நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியது எப்படி உடலின் தேவையோ அது போலத் தனிமையில் ஈடுபடும் போது உதிக்கும் புனித எண்ணங்களும் மனசலனமற்ற தியான நிலையும் உள்ளத்தின் தேவை. உடம்பிற்குத் தேவையான ஓய்வும் உறக்கமும் கிடைக்காத போது அது சோர்வாகி விடுவது போலத் தனிமையும் அமைதியும் கிடைக்காத போது உள் உணர்வுகளும் சோர்வடைகிறது. ஆன்மீகத் தன்மையே மனிதனின் அடித்தளமாகும். எனவே அவன் தன்னை வலிமையுடன், நிம்மதியுடன் தலைகுனிவற்ற நிமிர்வுடன் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நிலை மாறிக் கொண்டே இருக்கும் புற உலகு வாழ்விலிருந்து தன்னை அவ்வப்போது விடுவித்துக் கொண்டு நிலையான அழியாத உண்மைகளை நோக்க உளமுகமாகத் திரும்ப வேண்டும். சமயக் கோட்பாடுகள் ஆறுதல் அளிக்கின்றன என்றால் அதற்குக் காரணம் அச்சமயக் கோட்பாடுகள் உள்ளம் தனிமையில் திளைக்க ஒரு வழி ஏற்படுத்துகின்றன. அந்தத் தனிமையிலிருந்து தான் ஆறுதல் பிறக்கிறது. மனதை அவ்வப்போது ஆழ்ந்த அமைதியில் நிலைக்கச் செய்து உயர்ந்த புனித எண்ணங்களை உள்ளத்தில் எண்ணுவது, தியானிப்பது போன்றவற்றை மனிதன் அவனாகச் செய்ய மறப்பதால் மதங்கள் அவன் மேல் கடமைகள் என்று சடங்குகளை விதிக்கின்றன. உலக வாழ்வின் திசை திருப்பும் விஷயங்களிலிருந்து விலகி மனம் ஒன்றிய அமைதியுடன் அச்சடங்குகளில் ஈடுபடும் போது அவனது மனம் உள்ளத்தின் ஆழ்ந்த அமைதியில் நிலைக்கின்றது. தன் மனதை கட்டுப்டுத்தி பரிசுத்தப்படுத்திக் கொள்ள அறியாதவனுக்கு, ஆனால் அவன் தற்போதைய நிலையை விட உயர்ந்து புனித எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும் என்னும் விருப்பமுள்ளவனுக்குச் சமயங்கள் கட்டாயமாக்கும் சடங்குகள் துணை புரியலாம். ஆனால் எவன் தன் மேல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறானோ, தன்னுடைய இழிநிலை எண்ணங்களை விலக்க தனிமையைத் தேர்ந்தெடுக்கின்றானோ, புனித திசைகளில் தன் முழுமனதை செலுத்த முனைகிறானோ;- அவனுக்குப் புத்தகங்களின், போதகர்களின், ஆலயங்களின் உதவிகள் தேவையில்லை. ஆலயங்கள் புனிதர்களின் கொண்டாட்டத்திற்காக இல்லை, பாவிகளை மீட்கவே இருக்கின்றன.

 

தனிமையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போது ஒரு மனிதனுக்கு கிடைக்கும் வலிமையானது, வாழ்வின் பிரச்சினைகளையும் இச்சைகளின் தூண்டுதல்களையும் எதிர்க் கொண்டு சந்தித்து அவற்றின் பலம், பலவீணத்தை அறிந்து அவற்றை முறியடிக்கும் ஆற்றலை, மீண்டு வருவதற்கான வழியைக் காண்பிக்கின்றது. ஒரு கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்பதற்குக் காரணம் கண்களுக்குப் புலப்படாமல் அடியில் மறைந்து நிற்கும் அடித்தளமே ஆகும். தனிமையில் ஈடுபடும் நேரத்தில் (யாரும் உற்று நோக்கினாலும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பின்றி) அவனுக்குள் எழும்  உயர் எண்ணங்களின் ஆற்றலே அவனை வலிமையோடும் நிம்மதியோடும் இருக்கச் செய்யும் அடித்தளமாகும்.

தனிமையில் இருக்கும் போது தான், மனிதனுக்குத் தனது உண்மையான முகம் , உண்மையான குணம் என்ன என்று அவன் அறிந்து கொள்ள முடியும். தனது ஆற்றல்களைத் தனக்குத் திறந்திருக்கும் வாய்ப்புகளைக் குறித்து அவன் அறிய முடியும். உலக வாழ்வின் பரபரப்பிற்கு இடையில் , தனது முரன்பாடான ஆசைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் ஓசைக்கு  நடுவில் ,ஒலிக்கும் உள்இருப்பின் மெல்லிய குரலை அவனால் கேட்க முடியாது. தனிமையை நாடாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லை.

தனிமை பொழுதில் தங்கள் உண்மை இயல்பை முழுதாகக் காண நேரும். தங்கள் மனத்திரையில் விரியும் எண்ணங்களையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த முடியாது. தனிமையில் தங்கள் சொந்த எண்ணங்களுடன் தனியே போராட வேண்டி இருக்கும் , எனத் தனிமையைச் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். எனவே அவர்கள் உண்மையின் கடிந்துரைக்கும் குரலை மூழ்கடிக்கும் ஓசை மிகுந்த மேலோட்டமான கொண்டாட்டங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால்உண்மையை விரும்புபவன், மெய்யறிவை தேடி பெற முயல்பவன் , தனிமையில் தான் அதிகம் காணப்படுவான். தன் குண,இயல்புகள் முழுதாக, தெளிவாக வெளிப்படுவதைக் காண்பான். மேலோட்டமான விஷயங்களும், பேரிரைச்சல்களும் தன்னைப் பின் தொடராமல் பார்த்துக் கொள்வான்.தன்னுள் பேசும் உண்மையின் இனிமையான, மென்மையான குரலை கவனித்துக் கேட்பான்.

மக்கள் துணைக்குப் பலரை அழைத்துக் கொண்டு புதுப் புதுக் கேளிக்கைகளைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் நிம்மதியைப் பெறுவது இல்லை. பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியைத் தேடிக் கிடைக்காமல் களைத்துப் போகிறார்கள். சிரிப்பலைகளில், களியாட்டங்களில் மூழ்கி மகிழ்ச்சி பொங்கும் வாழ்வை தேடி அலைகிறார்கள். ஆனால் அவர்கள் கண்ணீரில் வாடுகிறார்கள். இறப்பு அவர்களை விடுவது இல்லை.

வாழ்வு என்னும் கடலுக்குள் சென்று மனிதர்கள் சுயநல கொண்டாட்டங்கள் என்னும் வலையை வீசுகிறார்கள். அங்கு வீசும்புயலிலும் சூறைக்காற்றிலும் சிக்கி நிலைகுலைந்து பின்பு தங்கள் உள்ளத்தின் அமைதியில் வீற்றிருக்கும் அடைக்கலம் என்னும் பாறையை நோக்கிப் பறந்து செல்கிறார்கள்.

மனிதன் புற உலக நடவடிக்கைகளில் ஈடுபடும்பொது தனது ஆற்றல்களைத் தொடர்ந்து செலவிட்ட வண்ணம் இருக்கிறான்.ஆன்மீக பலத்தை இழந்தவாறு இருக்கிறான்.அறநெறிப் பாதையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவன் தனிமையில் தியானத்தை நாட வேண்டும். இது மிக இன்றியமையாதது. இதைக் கடைப்பிடிக்காமல் மறப்பவன் வாழ்வைக் குறித்த சரியான அறிவைப் பெற மாட்டான். அதைப் பெற்றிருந்தால் இழந்துவிடுவான். நல் குணங்களைப் போலத் தோற்ற மளித்து ஏமாற்றும் நுட்பமான பாவங்களை அவனால் இனம் கண்டு புரிந்து கொள்ள முடியாது. அவை அவனுள் ஆழமாக வேர் பிடித்துக் கொள்ளும். எல்லோரும் அவ்வகைப் பாவத்தில் உழல மெய்யறிவு பெற்றவர்கள் மட்டுமே மீள முடியும்.

அமைதியானபொழுதில்எண்ணங்கள்உள்நோக்கிதிரும்பும்போது

தன்னுள் சந்தேகம் கொள்பவன் எவனோ,

(தீய குணங்களை உறைகின்றனவா என்று சந்தேகம் கொள்பவன் எவனோ, )

பணிவானஇதயத்தோடுதன்னுள்உறையும்நல்குணங்களுக்குநன்றிசெலுத்துபவன்எவனோ

அவனிடம் மட்டுமே என்றும் உண்மையான மதிப்பு வீற்றிருக்கும்.

 

புற உலகக் கொண்டாட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுபவன் பெரும்பாலும் ஏமாற்றத்துக்கும் வருத்தத்திற்கும் ஆளாகிறான். கேளிக்கை ஆட்டங்களின் சத்தம் எங்கே அதிகமாக இருக்கிறதோ, இதயமும் அங்கே ஆழமான வெறுமையுடன் இருக்கும். எவனது முழு வாழ்வானது, அது இச்சைகளுக்கு இணங்காத வாழ்வாக இருப்பதாகவே ஏற்றுக் கொண்டாலும் கூட ; –

அந்த வாழ்வானது  புற உலகை சார்ந்தே இருக்கின்றது என்றால் ,

நிலைமாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மேலோட்டமான காட்சிகளைச் சார்ந்தே இருக்கின்றது என்றால் ,

தனிமையைத் தேர்ந்தெடுத்து ;- தன் உள்ளத்தில் இருந்து வழிக்காட்டும் நிலையான இருப்பை நாடாமல் இருக்கின்றது என்றால் ,

 

அத்தகைய மனிதன் அறிவையும் ஞானத்தையும் பெறாமல் பயன்பாடற்று இருப்பான். அவனால் உலகத்திற்கு உதவி செய்ய முடியாது. உலகை உயர் எண்ண உணர்வுகளால் வலிமை படுத்த முடியாது. காரணம் அவனிடம் உலகிற்கு வழங்க எந்த உயர் எண்ணமான உணர்வும் இல்லை. அவனது உள்ள பெட்டகம் வெறுமையாக இருக்கிறது. ஆனால் வாழ்வின் உண்மைகளைக் குறித்து அறிய தனிமையை நாடுபவன்,தன் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளை அடக்குபவன், அத்தகைய மனிதன் ஒவ்வொரு நாளும் அறிவையும் ஞானத்தையும் பெற்றவாறு இருக்கிறான். அவனது உள் இருப்பு உண்மையால் நிறைந்து இருக்கிறது. அவனால் உலகத்திற்கு உதவ முடியும். அவனது உள்ள பெட்டகம் நிரம்பி இருக்கிறது. அதன் இருப்புக் குறையும் போது மீண்டும் வரவழைக்கப்படுகிறது.

ஒருவனது உள்ளத்தில் உறையும் உண்மை ஒளி முழுப் பிரபஞ்சத்திற்கும் பொதுவான உண்மையின் ஒளியாகும்.மனிதன் ஆழ்ந்த மெய்யுணர்வுடன் உள்ளத்தில் உறையும் உண்மை ஒளியில் முழ்கி ஆழ்ந்து சிந்திக்கும் போது அறிவையும் ஆற்றலையும் பெறுகிறான். பூ மொட்டவிழ்ந்து மடல்களைத் திறப்பது போல உண்மை ஒளியின் முன்பு மனிதனும் மலர்ந்து வாழ்வை சுரக்கச் செய்யும் அதன் ஒளிக்கீற்றைப் பருகுகிறான்.ஞானம் வற்றாமல் சுரக்கும் அதன் ஊற்றுக் கண்ணுக்கே சென்று உயர் எண்ணங்களுக்கு நீர் வார்க்கும் அந்த ஜீவ ஊற்றிலிருந்து தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அத்தகைய ஒரு மணிநேர குவிந்த மன நிலையில் ஒரு மனிதன் பெறுகின்ற அறிவை ஒரு வருட புத்தகப் படிப்பாலும் அவனுக்கு வழங்க முடியாது. உயிர் சக்தி எல்லையற்றது. ஞானம் அளவிட முடியாதது. அதன் ஊற்றுக் கண் என்றும் வற்றாது சுரப்பது.தன் உயிர் சக்தியின் ஆழத்திலிருந்து என்றும் வற்றாமல் சுரக்கும் உயர் ஞானம் என்னும் கிணற்றிலிருந்து இரைத்த நீரைப் பருகுபவன் நிலையான வாழ்வு என்னும்  அந்த நீரில் கரைகிறான்.

வாழ்வின்ஆழமானஉண்மைகளுடன்தொடர்பில்இருக்கும்பழக்கமும்வாழ்வுஎன்னும்நீரைஎன்றும்வற்றாதுசுரக்கும்அதன்ஊற்றுக்கண்ணிலிருந்துபருகுவதும்தான்மேதைகளின்சிறப்பாகும். அவர்களின்கையிருப்புஎன்றும்குறையாது. காரணம்எல்லாவற்றுக்கும்காரணமானமூலவட்டத்திலிருந்துதங்கள்தேவையைநிறைவுசெய்துக்கொள்கிறார்கள். அதனால்தான்அவர்களதுசெயல்களும்என்றும்புத்தம்புதியதாகப்பொலிவாகஇருக்கின்றன. அவன்கொடுக்கக்கொடுக்கஅவன்மென்மேலும்முழுமைபெறுகிறான். செய்துமுடிக்கும்ஒவ்வொருசெயலாலும்அவன்மனம்பரந்துவிரிந்துகுறுகியஎல்லையைக்கடந்துஅளவில்லாதஆற்றலைகாண்கிறது.மேதைஉள்உணர்வால்உந்தப்படுகிறான். ஒருஎல்லைக்குஉட்பட்டதற்கும்எல்லையில்லாததற்கும்இடையில்இருக்கும்இடைவெளியில்ஒருபாலத்தைஏற்படுத்துகிறான். ஒவ்வொருசிறந்தபணிக்கும்ஆதாரமானபிரபஞ்சஊற்றிலிருந்தேஅவன்வேண்டியதைபெறுவதால்இரண்டாம்கட்டநிலையின்உதவிகள்அவனுக்குத்தேவைப்படுவதுஇல்லை. சாதாரணமனிதனுக்கும்மேதைக்கும்உள்ளவேறுப்பாடுஇதுதான், ஒருவன்உள்இருக்கும்உண்மைகளைப்பார்க்கிறான். மற்றவன்வெளிஇருக்கும்தோற்றங்களைப்பார்க்கிறான். ஒருவன்கொண்டாட்டங்களைநோக்கிஓடுகிறான். மற்றவன்மெய்யறிவைதேடிஓடுகிறான். ஒருவன்புத்தகத்தைநம்புகிறான். மற்றவன்உள்உணர்வின்வழிகாட்டுதல்களைநம்புகிறான். புத்தகங்கள்எந்தஅளவுவரைபயன்படும்என்றுஅறிந்துக்கொண்டவனுக்குப்புத்தகங்கள்நன்மையளிக்கும். புத்தகங்கள்ஞானத்தின்ஊற்றுஅல்ல. ஞானத்தின்ஊற்றுவாழ்வில்தான்இருக்கிறது. முயற்சியாலும், பயிற்சியாலும், அனுபவத்தாலும்அதைஅறியலாம். புத்தகங்கள்தகவல்களைஅளிக்கலாம். அறிவைஅளிக்கமுடியாது. அவைஉங்களைத்தட்டி, எழுப்பமுடியும்.ஆனால்உங்களைச்சாதிக்கச்செய்யமுடியாது. நீங்கள்தான்முயற்சிசெய்துஅடையவேண்டும். தன்னுள்உறையும்அமைதியின்இருப்பிலிருந்துஅறிவைத்தேடாமல்புத்தகஅறிவைமுழுதும்சார்ந்துஇருப்பவனதுஆற்றல்மேலோட்டமானதாகும். விரைவில்தீர்ந்துவிடக்கூடியஒன்றாகும். அவன்மிகக்கெட்டிக்காரனாகஇருக்கலாம். ஆனால்உள்உணர்வால்உந்தப்படாதவன், அவன்சேர்த்துவைத்துள்ளதகவல்களஞ்சியம்விரைவில்முடிவைஎட்டும். பின்புஅதேதகவல்களைமீண்டும்ஒப்பிக்கக்கூடியவனாகத்தள்ளப்படுவான். “நிகழும்இந்தக்கனத்திற்குஏற்றவாறுசெயல்படுவதுதான்” வாழ்வின்இனிமையானஉயிரோட்டம். அவனதுசெயல்களில்அந்தஉயிரோட்டம்இருக்காது. அவன்உள்உணர்வால்உந்தப்படாததால்அவன்செயல்களில்புதியஒன்றின்பொலிவைகாணமுடியாது. தேவைகளைஒருஎல்லைவகுக்காமல்ஈடுசெய்யக்கூடியமூலவட்டத்திலிருந்துஅவன்தன்னைத்துண்டித்துக்கொண்டுள்ளான். அவன்வாழ்வுடன்தொடர்புகொள்ளவில்லை. இறந்து விட்ட, இறந்துகொண்டிருக்கும்தோற்றங்களுடன்தொடர்புகொள்கிறான். தகவல்கள்ஒருவரையறைக்குஉட்பட்டது. அறிவோஎல்லையில்லாதது.

 

மேதைகளின் உள் உணர்வுகளையும், பேராற்றல்களையும் தனிமை தான் பாதுகாத்து ,காப்பாற்றி வளர்த்து, முழுமை பெற செய்கின்றது. மிகச் சாதாரண மனிதனும் உயர்ந்த குறிக்கோளை தன்னுள் கொண்டு, தன்னுடைய எல்லா ஆற்றல்களையும் உள்ள உறுதியையும் வரவழைத்து அந்தக் குறிக்கோளில் மூழ்கி, தனிமையில் சிந்தித்து செயல்படும் போது அவன் குறித்து வைத்த இலக்கை சாதித்து மேதையாவான். மனிதக் குலம் ஒரு உயர்வு நிலையை அடைய வேண்டும் என்று எண்ணி , எவன் உலகின் கொண்டாட்டங்களைத் துறந்து, பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல், அந்த உயர்நிலையை நனவாக்க தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் முயற்சிக்கின்றவன் ,தனிமையில் சிந்திக்கின்றவன்;- ஞானியாக, தீர்க்கதரிசியாக மாறுகிறான். எவன் அமைதியாகத் தன் உள்ளம் இனிமையில் தவழும்படி செய்கிறானோ; தன் மனம் தூய்மையானதை, அழகானதை, நன்மையானதை நாடும்படி செய்கிறானோ; என்றும் மாறாத பேருண்மையின் மையத்தை நீண்ட தனிமை பொழுதுகளில் தியானிக்கின்றானோ; தன் உள் உணர்வின் மெல்லிய இசையைக் கேட்டு அசைகிறானோ; அவன் பிரபஞ்சத்தின் பாடலைப் பெற தகுதி பெறுகிறான். அவன் இறுதியில் உலகின் பாடகனாகவும் கவிஞனாகவும் ஆகிறான்.

எல்லா மேதைகளும் இப்படித் தான் உருவாகிறார்கள். மேதைக் குணம் என்பது தனிமை ஈன்றெடுத்த எளிய உள்ளம் கொண்ட குழந்தை . ஆச்சிரியத்துடனும் ஆர்வத்துடனும் கவனிக்கும் அதன் அழகை இரைச்சல்களால் படை சூழப்பட்ட உலகால் புரிந்துக் கொள்ள முடியாது. அது உலகின் கண்களுக்கு புரியாத புதிராகவே விளங்கும். பலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அமைதியின் கோட்டைக்குள் இருக்கும் வாழ்வின் அழகு, அந்தக் கோட்டையின் மதில்சுவர்களைக் கடந்து வந்து, கண்கள் அகலக் கவனிக்கும் , தனிமையை நாடும் இந்தக் குழந்தையிடம் மட்டும் காட்சியளித்துச் செல்கிறது.

வாழ்வின் ஒரு மெல்லிய வெளிச்சம்

மனிதனின்உயர்எண்ணங்களுக்குவழிக்காட்டும்விதமாக

எப்போதும் அவனுக்கு முன் செல்லும் .

 

கொடிய கொலைகாரனாக, கண்மூடி பாவங்களைச் செய்பவனாக விளங்கிய ஒருவனே மூன்று வருட பாலைவன தனிமைக்குப் பின்பு அன்பான உபதேசம் செய்பவனாக மாறி புனித பவுல் ஆகிறான்.உலக வாழவில் சுக போகங்களைக் குறைவின்றி அனுபவித்தவன் கவுதம சித்தார்த்தன்.அவன் தன் வாழ்வின் புரியாத புதிருக்கான விடையை தேடி,ஆசைகளின் தன்மையை அறிய தனிமையைத் தேர்ந்தெடுத்துக் காட்டில் ஆறு வருடங்கள் தியானத்தில் ஈடுபட்டு சாந்தமும் ஞானமும் ஒளிவீசும் மெய்யறிவு பெற்ற புத்தனாக மாறுகிறார். அவரின் போதனைகளைத் தன் இதயத் தாகம் தீர உலகம் பருகுகின்றது. சாதாரணக் குடிமகனாக உலக வாழ்வின் கடமைகளைச் செய்து கொண்டிருந்த லா-ஒட்ஸ் தனிமையைத் தேர்ந்தெடுத்து மெய்யறிவை தேடி தாவோ எனப்படும் எல்லாவற்றுக்கும் காரணமான ஒன்றை அறிகிறான்.உலகிற்கு ஆசானாக மாறுகிறார். எழுத்தறிவில்லாத தச்சன் ஆன இயேசுவே பல வருடத் தனிமையை மலைகளில் கழித்த பின்பு நீங்காத அன்போடும் ஞானத்தோடும் திரும்பி மனிதக் குலத்தை மீட்கும் அருள் பெற்றவராகிறார்.

ஞானம் பெற்ற பின்பும், தெய்வீக மெய்யறிவைப் பெற்ற பின்பும் இப் பேரான்மாக்கள் பெரிதும் தனித்தே காணப்பட்டன.அவ்வப்போது உலக வாழ்விலிருந்து விலகி தனிமையில் சிறிது காலம் கழித்தவாறே வாழ்ந்தனர்.அறநெறிகளைக் கடைப்பிடிக்கும் உயர் மனிதனும் அவ்வறநெறிகளின் சாரத்தைத் தன் நெஞ்சில் மீண்டும் மீண்டும் பதிய வைத்துக் கொள்ள மறந்தால் அல்லது புறக்கணித்தால் பல படிகள் கீழே இறங்கி விடுவான். அவனது ஈர்க்கும் ஆற்றலும் அவனை விட்டு விலகும். நெஞ்சில் மீண்டும் பதிவது என்பது தனிமையில் மட்டுமே முடியும். தங்களது எண்ணங்களையும் வாழ்வையும் விழிப்புணர்வுடன் தங்களுக்குள் இருக்கும் படைப்பின் ஆற்றலுடன் ஒத்து இசையும்படி இப்பேராசான்கள் வாழ்ந்தார்கள்.தங்களது தனித் தன்மையை விட்டு மேல் எழுந்து தங்களது ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் அடிபணியாமல் பிரபஞ்ச கட்டளைகளுக்கு மட்டுமே அடிபணிந்தார்கள். புதிய உலகை உருவாக்கும் எண்ணங்களுக்கு வித்திட்ட பேராசான்கள் ஆனார்கள்.

இவ்வாறு நிகழ்வது ஒரு அற்புதமல்ல. விதியின் படி இவ்வாறு தான் அது நடக்கும். விதியின் படி நிகழ்வதை அற்புதம் என்று கூறினால் இதையும் அற்புதம் என்று கூறலாம். ஒவ்வொரு மனிதனும் தன் உள் மனஎண்ணங்களைப் பிரபஞ்ச நன்மையுடன் பேருண்மையுடன் ஒத்து இசையும்படி செய்யும் போது படைக்கும் ஆற்றல் அவனுள் ஊற்றெடுக்கும். என்றும் நிலையான ஒன்றின் குரலை வெளிப்படுத்துபவர்களே கவிஞர்களும், ஓவியர்களும்,புனிதர்களும், ஞானிகளும். அவர்களது தான் என்ற அகம்பாவம் எந்த அளவு குறுக்கிடாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களது பணியும் செய்தியும் தெளிவாக இருக்கும். அவர்களது தான் என்ற அகம்பாவம் குறுக்கிடும் போது அவர்களது பணியும் செய்தியும் அதற்குத் தகுந்த பின்னடைவை சந்திக்கும். தான் என்ற அகம்பாவம் அறவே அற்ற நிலையில் பயன்படுத்தப்படும் ஆற்றலே மேதைகளின் அடையாளமாகும்.

இந்த ” தன்னை மறுக்கும்” நிலையை, தனிமையை ஆரம்பித்து , தொடர்ந்து பின்பற்றும் போது தான் அடைய முடியும்.மனிதன் புற உலக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவனது ஆன்மீக ஆற்றல்களும் செலவாகிக் கொண்டே இருக்கும்.அதே வேளையில் அவன் தன் ஆன்மீக ஆற்றல்களை எல்லாம் ஒரு சேர அழைத்து அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது மிகக் கடினம். அவ்வாறு ஒருமுகப்படுத்தும் ஆற்றல், எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சம நிலை இழக்காமல் இருப்பது போன்றவைகள் முடியாத விஷயங்கள் இல்லை என்றாலும் அந்த நிலையை எட்டுவது என்பது தனிமையை ஒரு பழக்கமாகத் தினசரி வாழ்வில் பல ஆண்டுகளாகக் கொண்டவர்களுக்கே முடியும்.

மனிதனின் உண்மையான இருப்பிடம் பேரமைதியில் தான் இருக்கிறது. அவனுள் உறையும் எல்லா உண்மையானவற்றுக்கும் நிலையானவற்றுக்கும் இந்தப் பேரமைதி தான் காரணமாகும். எனினும் அவனது நிகழ் கால வாழ்வு இரு முகத் தன்மை கொண்டது. புற உலக வாழ்வின் கடமைகளை அவன் ஏற்றுத் தான் ஆக வேண்டும். முழுக்க முழுக்கத் தனிமையோ அல்லது முழுக்க முழுக்கப் புற உலக வாழ்வோ உண்மையான உலக வாழ்வாகாது. வலிமையையும் மெய்யறிவையும் தனிமையில் ஈடுபட்டு தேடி அடைந்து அவற்றைக் கொண்டு புற உலக வாழ்வின் கடமைகளை நிறைவேற்றுவதே சரியான வாழ்வாகும்.நாள் முழுதும் உழைத்துக் களைப்பாகி மாலையில் வீடு திரும்பி இனிய ஓய்வை மனிதன் நாடுவான்.அது அவனைப் புத்துணர்ச்சி பெற செய்து அடுத்த நாள் மீண்டும் உழைப்பதற்குத் தயார்படுத்தும்.அது போல உலக வாழ்வு என்னும் பயிற்சி கூடத்தில் பயிலும் போது அதன் சுமைகளால் மனம் உடைந்து போக விரும்பாதவன் அவ்வப்போது தன்னுடைய நிலையான வீடாகிய பேரமைதியில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தனிமையில் ஈடுபட்டு புனிதமான வகையில் பயனுள்ளவாறு செலவிடுபவன்,வலிமை நிறைந்தவனாக, பயனுள்ளவனாகப் பேரருள் மிக்கவனாக உருவாகிறான்.

தனிமை என்பது வலிமையானவர்களுக்கும் அல்லது வலிமையாக மாற விரும்புபவர்களுக்குமே. ஒருவன் உயர்மனிதனாகிக் கொண்டிருக்கும் போது அவன் தனிமையை நாடுபவனாகிறான். அவன் தனிமையில் தேடியதை கண்டு அடைகிறான்.தேடிக்கண்டு அடைந்ததற்குக் காரணம் எல்லா வகையான அறிவையும், ஞானத்தையும், உண்மையையும், ஆற்றல்களையும் அடைய ஒரு வழி இருக்கின்றது.அந்த வழிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன.ஆனால் அவை மனிதனுக்குள் உறையும் அதிகம் கண்டு உணரப்படாத பேரமைதியிலும் சத்தமில்லாத தனிமையிலும் தான் இருக்கின்றன.

 

Share This Book

Feedback/Errata

Comments are closed.